வாக்காளர்களின் விரல்களில் காதுகளை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் பஞ்சு

291 0

ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது,  வாக்காளர்களின் விரல்களில், காதுகளை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் பஞ்சு (Disposable cotton buds) மூலம் தடவப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (12) 200 வாக்காளர்களுடன் நடத்தப்பட்ட தேர்தல் ஒத்திகையின்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவினர் அதிகாரிகள், வாக்காளர்களின் கைகளில், காதுகளை சுத்திகரிக்கப் பயன்படும் பஞ்சையே பயன்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர், மார்க்கர் பேனாக்களே பயன்படுத்தப்பட்டன.

இந்தத் தேர்தல் ஒத்திகை, காலை 8.30 மணி வரை 12.30 வரை, 200 வாக்காளர்களுக்கு மாத்திரம், சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்படும் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்ட தேர்தல் ஒத்திகை வெற்றியளித்துள்ளதாக, தேர்தல்கள் ஆணையகத்தன் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.