சுனில் ஜயவர்தன உயிரிழந்தமைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் பொறுப்பு

318 0

தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன உயிரிழந்தமைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் பொறுப்பு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது,
லீசிங் குத்தகை செலுத்துவது தொடர்பாக ஜனாதிபதி உரை நிகழ்த்தியபோது சுனில் ஜயவர்தன வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

நாடு தழுவிய முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அனைவரும் குறித்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்