சங்கிலிய மன்னனின் 401ஆவது நினைவு தினம் வவுனியா கற்குளம் பகுதியில் நினைவுகூரப்பட்டது.
அத்துடன், குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் சங்கிலிய மன்னனுக்கான பிதிர்கடன் நிகழ்வுகள் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதுடன், சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலய வளாகதத்தில் அவருக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, சங்கிலிய மன்னனின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுச் சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.
மேலும், மரநடுகை நிகழ்வு இடம்பெற்றாத் தொடர்ந்து அவரது நினைவாக 5 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அதன் வவுனியா முக்கியஸ்தர் மாதவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் செயலாளர் திருக்கேதீஸ்வரன், பிரதேசசபை உறுப்பினர் செல்வநாயகம் சுரேஸ், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.