நீதியமைச்சரின் செயலுக்கு கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

354 0

nazeerஐ.எஸ். அமைப்பில் இலங்கை முஸ்லிம்கள் 32 பேர் இணைந்து கொண்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்த கருத்திற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்,

இலங்கை முஸ்லிம்கள் 32 பேர் அமைப்பில் சேர்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டி நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றியிருந்தார். அவர்கள் யார் என நீதி அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் நீதி அமைச்சர் தெரிவித்த இக்கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நீதி அமைச்சரின் இந்த உரையானது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றவர்களுக்கு ஆதரவளிப்பதாக உள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.