கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர், ஆவடி ஆகிய பகுதிகளில் உள்ள மத போதகர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை எனவும், அதேபோல பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு தான் எனவும் தெரிவித்தார்.