வெள்ளை நிறமாக மாறவுள்ள மஞ்சள் கடவைகள்

347 0

pedestrian-crossingநாட்டிலுள்ள வீதிகளில் காணப்படும் மஞ்சள் கடவையிலுள்ள நிறத்தை வெள்ளை நிறமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வீதிகளில் காணப்படும் மஞ்சள் நிற பாதசாரிகள் கடவைகளை வெள்ளை நிறமாக மாற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதற்கமைய மஞ்சள் நிற பாதாசரிகள் கடவைகள் வெள்ளை நிறமாக மாற்றப்படவுள்ளன.

பாதசாரிகள் கடவைகளை சர்வதேச மட்டத்தில் பேணுவதற்கு இந்த நிற மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.குறித்த வேலைத்திட்டிடம் மேல்மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், ஒரு வருட காலத்துக்குள் அனைத்து வீதிகளிலும் மஞ்சள் நிற கடவைகள் வெள்ளை நிறமாக மாற்றப்படவுள்ளன.