பாகிஸ்தான் சந்தைப்பகுதியில் குண்டுவெடிப்பு- ஒருவர் உயிரிழப்பு

304 0

பாகிஸ்தானில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப்பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.பாகிஸ்தானின் உயர்பாதுகாப்பு கொண்ட நகரமான ராவல்பிண்டியின் சத்தார் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தையில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

குண்டுவெடித்த பகுதியில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக சேதமடைந்தன. போலீசார் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இது பயங்கரவாதத்தின் முயற்சி என்றும், ஆனால் பொதுமக்களின் உயிருடன் விளையாடுவோர் சட்டத்தில் இருந்து தப்ப முடியது என்றும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் எச்சரித்தார்.

கொரோனாவுக்கு எதிராக நாடு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.