ரேசன் கடையில் மீண்டும் நிவாரணம் வழங்கப்படுமா?- அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்

306 0

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை பொறுத்துதான் நியாயவிலைக் கடைகளில் மீண்டும் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கையை பொறுத்துதான் நியாயவிலைக் கடைகளில் மீண்டும் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

பொதுமக்களின் நிலையை அறிந்து தான் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு போடுங்கள் என்றால் எப்படி போட முடியும்?. நிச்சயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கோட்டை விட மாட்டோம்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.