இலங்கையில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடைய தொடங்கியுள்ளமை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
தீவிரமடைந்துவரும் இனவாத உணர்வுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஜெனீவா தீர்மானம் மூலம் இலங்கை அரசாங்கம் தன்னை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அர்ப்பணித்துள்ளது.
அண்மைய நாட்களில், அவதானிக்ககூடியதாகவுள்ள ஆபத்தான உரைகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்குள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்றவற்றுக்காக தன்னை அர்ப்பணித்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமில்லை என கூறியுள்ளார்.
இதேவேளை உலகின் பல பகுதிகளில் பகைமை பேச்சு மற்றும் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள, சர்வதேச மனினப்பச்சபையின் தென்னாசியாவுக்கான இயக்குநர், அரசுகள் அனைத்து மக்களும் மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு உள்ள உரிமை குறித்த தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.