சிறிலங்காவில் நீர், மின்சார கட்டணங்களுக்கான சலுகைகளை வழங்குமாறு சஜித் கோரிக்கை

279 0

சிறிலங்காவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு நீர் மற்றும் மின்சார கட்டணங்களுக்கான சலுகைகளைப் பெறுவதற்காக பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட கட்சி தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களுக்கான கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் ஒருவர் அண்மையில் கூறியதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்கள் இரட்டிப்பாகியமையே மக்களின் பெரும் சுமையாகிவிட்டது என்றும் இதுவே தற்போது மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சினை ஏழை முதல் செல்வந்தர் வரை அனைவருக்கும் இருப்பதாக தெரிவித்த சஜித் பிரேமதாச, இந்த பிரச்சினை தீர்க்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தினார்.