இலங்கையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அபாயம் இல்லை

309 0

இலங்கையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அபாயம் இல்லை என சுகாதார சேவைகள் (பொதுச் சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பாபா பாலிஹவதன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் மாத இறுதியில் இருந்து தற்போது வரை சமூகங்களுக்கிடையில் எந்த தொற்றும் பதிவாகவில்லை எனவும் அவர் மிகத் தெளிவாகத் தெரிவித்தார்.

இந்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவா கியுள்ள கடற்படையினர் இப்போது முழு கட்டுப் பாட்டில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், சுகாதாரத் துறையினால் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்து வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல் களை கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.