கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

342 0

akilavirajகல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் கல்விக்காக ஒதுக்கிய நிதியை முழுமையாக செலவழிக்காது மீதப்படுத்திய குற்றத்திற்காக  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடளுமன்றில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா, கல்விக்கு நிதி ஆறு வீதம் ஒதுக்கப்படும் என்று அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய நிலையில், தற்போது பாடசாலைகளில் இருக்கும் சொத்துக்களை எல்லாம் சேர்த்து 6 வீதத்தை நெருங்கிவிட்டதாகக் காட்டுவதற்கு இந்த அரசு முற்படுகின்றது.

ஆனால், கடந்த வருடம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 17 கோடி ரூபாவை இந்த வரவு – செலவுத் திட்டத்தில் குறைத்துள்ளனர்.எதிர்பார்த்த எல்லாம் கிடைத்துவிட்டதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சொல்கிறார்.17 கோடி ரூபா குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை. கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதி எஞ்சி இருக்கின்றது. அதை எடுத்துக்கொள்வோம் என்று அரச தரப்பினர் சொல்கின்றனர்.

இது பிழையான விடயம்.அப்படி செலவழிக்காமல் வைத்திருக்க முடியாது.அப்படியென்றால் கொடுத்த நிதியை கல்விக்காக செலவழிக்காது வைத்திருந்த குற்றத்துக்காக கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட வேண்டும்…… என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.