இடையூறு ஏற்படுத்துபவர்களை கட்டுப்படுத்துபவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்

279 0

யாழ்ப்பாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் குழுக்களையும், தனிநபர்களையும் கட்டுப்படுத்துபவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் உள்ளதை தாங்கள் அறிந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

அவர்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், அவசியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் காவல்துறையின் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் குழுக்களையும், தனிநபர்களையும் கட்டுப்படுத்துபவதற்கு தாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்

அவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும், அவற்றில் ஈடுபடும் நபர்கள் தொடர்பிலும் உரிய முறையில் தங்களுக்கு அறிவிக்கப்படுமாயின், அந்தக் குழுக்களை கட்டுப்படுத்த தங்களால் முடியும் என யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.