கண்டி துப்பாக்கிச்சூடு-மற்றுமொருவர் கைது

478 0

kandyகண்டி கல்ஹின்ன, பெபிலகொல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் ரணல பகுதியைச் சேர்ந்தவரெனவும், 23 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் நேற்றுக்காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இன்று குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கண்டி கல்ஹின்ன, பெபிலகொல்ல பகுதியில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.