பொலிஸாரின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கொள்கைக்கு முற்றிலும் முரணானது : வாசுதேவ

274 0

அமெரிக்க தூதரகத்தின் முன்பாக முன்னிலை சோசலிய கட்சி முன்னெடுத்த போராட்டத்தில் பொலிஸார் செயற்பட்ட விதம் அரசாங்கத்தின் கொள்கைக்கு முற்றிலும் முரணானது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி போராட்டங்களில் ஈடுப்படுவதற்கு பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் செயற்பட்ட விதம் அநாவசியமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

<p>அமெரிக்க தூதரகத்தின் முன்பாக இடம் பெறவிருக்கும் போராட்டத்தை தடை செய்யுமாறு பொலிஸாருக்கு கோரிக்கை விடுக்கவில்லை என அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன் ஜனநாயக போராட்டத்திற்கு எதிராக பொலிஸாரின் செயற்பாடுகள் ; கண்டிக்கத்தக்கது எனவும் அறிக்கை பல்வேறு தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ளன

போராட்டத்தை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு பொலிஸார் செயற்பட்ட விதம் அநாவசியமானதுடன், அடாவடித்தனமாகவும் காணப்பட்டது. இச் செயற்பாடு அரசாங்கத்தின் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் ;இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.