சங்கிலிய மன்னனின் 401 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதி, செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் பாலச்சந்திரன், யாழ். மாநகர பதில் முதல்வர் ஈசன், மறவன்புலவு சச்சிதானந்தம், மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் ஜமுனா ஏரியில் மலர் தூவி சங்கிலி மன்னனுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.