இனவாதத்தை இல்லாதொழிப்பதில் பொலிஸாருக்கு முக்கிய கடமை உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் அலுவிகாரை விளையாட்டு மைதானத்தில் பயிலுநர் பயிற்சியை முடித்து வெளியேறியவர்களுக்காக நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,
இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பது தொடர்பிலும் பொலிஸாருக்கு முக்கிய கடமை இருக்கிறது.ஆசிய பிராந்தியத்தின் சிறந்த பொலிஸ் சேவையாக இந்நாட்டு பொலிஸ் சேவை தரம் உயர்த்தப்படும்.ஒற்றுமையை வலியுறுத்தி நாட்டின் தனித்துவத்தை நிலைநாட்டுவதில் ஸ்ரீலங்கா பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விசேட பொறுப்பு காணப்படுகிறது.
தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பேசக்கூடிய உத்தியோகத்தர்கள் இந்த நாட்டுக்கு மிக அவசியம்.21ம் நூற்றாண்டுக்கு பொருத்தமான அனைத்து அம்சங்களை கொண்ட ஆசிய பிராந்தியத்தின் சிறந்த பொலிஸ் சேவையாக இந்த நாட்டு பொலிஸ் சேவை மாற்றியமைக்கப்படும்.குற்றத்தடுப்பு விடயம் தொடர்பில் கூடுதலான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியது அவசியம்.
இதற்காக விசேட பொலிஸ் பல்கலைக்கழகம் ஒன்றும் அமைக்கப்படும்.பொலிஸ் சேவையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது தொழிலை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு அவர்களுக்கான சேமநலன் விடயங்களிலும் கூடுதலாக அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.