நுணாவில் வாள் வெட்டில் சிறுமி உட்பட ஐவர் காயம்!

280 0

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இன்று (11) மதியம் மற்றும் மாலை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இன்று மதியம் எஸ்.ஏவி (16-வயது) என்ற சிறுமி வீதியால் சென்ற போது குழு ஒன்று வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. இதில் காயமடைந்த சிறுமி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரவு குறித்த சிறுமியின் சகோதரனான எஸ்.இளங்கீரன் (24-வயது) என்பவர் மீது அதே குழு வாளால் வெட்டியதாக கூறப்படும் நிலையில் அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் தரப்பை சேர்ந்த ஜெயசீலன் ஜெனீலன் (28-வயது), ஜெயசீலன் நந்தினிதேவி (56-வயது), எஸ்.ரவிந்திரகுமார் (34-வயது) ஆகியோர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எவ்வாறு காயமடைந்தனர் என்பது தெரியவரவில்லை.