பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாஹபொல கொடுப்பனவுகள் வழங்கப்படவிருப்பதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மஹாபொல நிதியத்தில் இருந்து 51 வீதமும், திறைசேரியில் இருந்து 49 வீத நிதி பெறப்பட்டு இருப்பதாக தகவல் தொழினுட்பம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த மஹாபொல கொடுப்பனவு வழங்குவதற்கு 160 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது.
பல்கலைக்கழகங்களில் சுமார் 33 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்