தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின்மூலம் சாதித்ததைவிட மென்வலு அரசியலினாலே பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தன்னை மென்வலு அரசியல்வாதி எனப் பலர் பேசி வருவதாகவும் இதனால் தான் பெருமைகொள்வதாகவும், நேற்று நடைபெற்ற மாமனிதர் ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவுநாளில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
மேலும், 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் தமிழருக்குத் தீர்வு கிடைக்குமென்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சொன்னபோது பலர் எள்ளி நகையாடியதாகவும், இப்போதும் நகையாடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் இன்று அந்தக் கூற்று நிறைவேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.