ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு – சஜித்

349 0

முன்னிலை சோசலிஷக் கட்சி நடத்திய போராட்டத்தின் மீதான தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரானது என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புலொய்ட் என்பவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாஸ, அமெரிக்க பொலிஸார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக நம் நாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. இதன் போது இடம்பெற்ற செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பங்கம் விளைவிக்க கூடியதாக அமைந்துள்ளது இதனை நான் எதிர்க்கிறேன்.

ஜனநாயகத்தை மதிக்கும் பொதுமக்கள் எந்த கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் தங்களின் கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளது.

பொது மக்கள் வீதியில் இறங்கி ஜனநாயகத்திற்காகப் போராடுவதற்கும் பேசுவதற்கும் சுதந்திரம் உள்ளது.  கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவமானது கண்டிக்கத்தக்கது. எந்த விதத்திலும் ஜனநாயகத்திற்குப் பங்கம் விளைவிக்க கூடியவகையில் செற்படுவர்களுக்கு இடம்கொடுக்க முடியது.