வேண்டுமென்றே தவிர்க்கப்பட்ட ‘மாமனிதர்’ – அருந்தவபாலன் கவலை

300 0

arunthavpalanமாமனிதர் ரவிராஜ் அவர்களின் சிலைக்கல்லின் அடியில் ‘மாமனிதர்’ என்று குறிப்பிடாதது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருப்பதாகவும்  அது தனக்கு வருத்தமளிப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிக் கிளைத் தலைவர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முகநூலில் அவரால் எழுதப்பட்ட பதிவு:

“மாமனிதன் இரவிராஜ் அவர்களின் மக்களை நேசிக்கும் உயர்ந்த பண்புகள் மட்டுமன்றி அவரது இறப்பும், வழங்கப்பட்ட மாமனிதர் பட்டமும் இணைந்தே அவருக்கு உயர்ந்த இடத்தைக் கொடுத்தது.

அவ்வகையில் அவரது சிலைக்கல்லின் அடியில் மட்டுமல்ல அழைப்பிதழலிலும் கூட அந்த உயர் மதிப்பளிப்பு இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதும் உண்மையானது. எவ்வாறாயினும் அம்மாமனிதனுக்கு சிலைவைக்கப்பட்டதை நாம் பாராட்டுவோம்”