பாடசாலை மாணவர்களுக்கான சீருடையை வழங்கும் முறைமை தொடர்பில் தேடி பார்ப்பதற்காக குழுவொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று (10) கூடிய அமைச்சரவையில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான சீருடையை வழங்குவதற்கு முன்னைய அரசாங்கத்தால் வவுச்சர் வழங்கும் முறைமை கடைப்பிடிக்கப்பட்டது.
இவ்வாறு வவுச்சர் வழங்குவதற்கு பதிலாக சீருடை வழஙங்குவதால் 540 மில்லியன் இலாபம் என அண்மையில் வியாபாரிகள் சிலர் அரசாங்கத்திடம் தெரிவித்தனர்.
இது குறித்து நேற்று அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டதுடன் அது குறித்து ஆராய குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்வியமைச்சசு, கைத் தொழில் அமைச்சு மற்றும் நிதி அமைச்சை இணைத்து இதற்கான குழுவை அமைக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.