சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.சிங்கப்பூரில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,965 ஆக அதிகரித்து உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை 26,532 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிங்கப்பூரில் உள்நாட்டு மக்களை விட வெளிநாட்டு தொழிலாளர்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு இந்திய தொழிலாளர்களே அதிகம் பேர் வேலை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.