இந்தியாவின் ஆதரவு இருக்கும்வரை இராணுவப் புரட்சிக்கு இடமில்லை!

299 0

sbஇந்தியாவின் ஆதரவு சிறீலங்காவுக்கு இருக்கும்வரை இராணுவப் புரட்சிக்கு இடமில்லையென அமைச்சர் எஸ்பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இராணுவச் சதி குறித்து அண்மையில் கூட்டு எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவிக்கையில்,இந்தியாவுடன் தற்போதைய அரசாங்கம் நட்புறவுக்கு அப்பாற்பட்ட சமூக, பொருளாதார உறவுகளை பேணுவதால் இராணுவ புரட்சி எமது நாட்டில் ஏற்படாமல் இந்தியா எம்மை பாதுகாக்கும்.

மேலும், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தின்போது, தினேஸ் குணவர்த்தன மக்களைக் குழப்பும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். இராணுவப்புரட்சி குறித்து பேசினார். தொடர்ந்து பொது எதிரணியின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டு நாடாளுமன்ற விவாதங்கள் கொண்டு செல்லப்படுமாயின் அது இராணுவ புரட்சிக்கு வழிவகுக்கும் செயற்படாக அமைந்து விடும் என தெரிவித்துள்ளார்.

அவ்வாறானதொரு சூழல் நாட்டில் ஏற்படும் என நான் நம்பவில்லை. காரணம் சிறீலங்கா இராணுவம் நாட்டில் 30 வருட யுத்தத்தை எதிர்கொண்டது. சிறீலங்கா இராணுவத்தை சர்வதேசமே ஏற்றுக்கொண்டது. இதன்பின்னணியில், இராணுவப் புரட்சி ஒன்றை ஏற்படுத்தும் நோக்கம் அவர்களுக்கில்லையெனவும் தெரிவித்துள்ளார்.