சென்னையில் இன்று கொரோனாவுக்கு 11 பேர் பலி

252 0

சென்னையில் இன்று ஒரு மருத்துவர் உள்பட 11 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 19,333 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளது. 12,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260-ஆக உள்ளது.

இந்நிலையில் சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 பேர், ரெயில்வே மருத்துவமனையில் ஒருவர், தனியார் மருத்துவமனையில் தலா ஒருவர் என 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த மருத்துவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதன் காரணமாக இன்று மட்டும் இதுவரை சென்னையில் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியாகி இருக்கின்றனர்.