கிளிநொச்சியில் ‘கொரொனா’ வைத்தியசாலைக்கு எதிர்ப்பு

260 0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலையாக கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையை மாற்றும் நடவடிக்கைக்கு அக்கராயன் பொது அமைப்புகள் எதிர்ப்பு.

இன்று காலை அக்கராயன் பிரதேச 15 அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது ஆட்சேபனையை தெரிவித்ததுடன் மனுக்களையும் கையளித்தனர்.

அக்கராயன் வைத்தியசாலை அருகாமையில் மக்கள் செறிவாக வசித்துவரும் நிலையில் அங்கு கொரோனா நோயாளிகளை அனுமதிப்பது ஆபத்தானது எனத் தெரிவித்தெ பொதுஅமைப்புகள் எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.