போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கியவர் உயிரிழப்பு

421 0

13 போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கிய ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை, மாகந்தன பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையில், உயிரிழந்தவரின் வயிற்றிலிருந்து 13 போதைப்பொருள் வில்லைகள் மீட்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க குறித்த நபர் போதை பொருள் அடைக்கப்பட்ட மாத்திரைகளை விழுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.