சிறிலங்கா கொள்ளுபிட்டி ஆர்ப்பாட்டத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்

252 0

சிறிலங்கா  கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதி கொள்ளுபிட்டியில் முன்னிலை சோசலிஷ கட்சியினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கடமையில் ஈடுபட்ட கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 30 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அத்திடிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.