வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் இணையத்தின் ஊடாக வாகன வரி அனுமதிபத்திரத்திற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் வசதி வவுனியா மாவட்ட செயலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாகனவரி அனுமதிபத்திரங்களை பெறுபவர்கள், மாவட்ட செயலகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரத்தில் தமது விண்ணப்பங்களை செலுத்தி 14 நாட்களுக்கு செல்லுபடியாக கூடிய தற்காலிக வரி அனுமதிப்பத்திரத்தை உடனடியாக பெற்றுகொள்ளமுடியும்.
அதன் அசல் பத்திரம் 14 நாட்களிற்குள் வாகன உரிமையாளரது வீட்டு முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையமூடாக விண்ணப்பிப்பவர்கள், மின்னஞ்சல் முகவரி, புகைபரிசோதனை சான்றிதழ், வாகனபதிவு சான்றிதழ், காப்புறுதிபத்திரம், இறுதியாக பெற்ற வரிப்பத்திரம் ஆகிய சான்றிதழ்களை கொண்டு இணையமூடாக விண்ணப்பிக்கமுடியும்.
இதன் மூலம் விடுமுறை தினங்களிலும் வாகன வரி அனுமதி பத்திரங்களிற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கமுடியும் என்பது குறிப்பிடதக்கது.