இலங்கையில் உள்ள மிருகக்காட்சி சாலைகள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய சரணாலயங்கள் என்பன திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் இவை மீளவும் திறக்கப்படவுள்ளன என சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நலன் மற்றும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தையடுத்து, மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மிருகக்காட்சி சாலைகள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய சரணாலயங்கள் என்பனவும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.