தமிழகத்திலுள்ள திருச்சி மத்திய சிறையிலிலுள்ள 54 ஈழத் தமிழர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றார்கள்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சிலர் இன்று மயக்கமடைந்ததாகச் சொல்லப்படுகின்றது.
இங்குள்ள ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் போலி ஆவணங்களைக் கொடுத்து கடவுச் சீட்டு எடுத்தது, சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா தப்ப முயன்றமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளனர்.
தம்மைப் பிணையில் கூட விடுதலை செய்ய மறுத்துவருவதாகத் தெரிவித்தே இவர்கள் போராட்டத்தை நடத்திவருகின்றனர். இவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்திருப்பதாகத் தெரிகின்றது.