சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

303 0

முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில், கடந்த 1998ம் ஆண்டு இலங்கை விமான படையாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 பேர் படுகொலை செய்யப்பட்ட 22ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (10) அனுஷ்டிக்கப்பட்டது.

கொரோனாத் தொற்றைக் காரணங் காட்டி பொலிஸார் குறித்த நினைவேந்தல் நிகழ்விற்கு தடை விதித்திருந்தனர்.

எனினும் தடையையும் மீறி படுகொலை செய்யப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது தாக்குதலில் 4 பிள்ளைகளை இழந்த தந்தை புஸ்பராசா பிரதான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.