79 இலட்சத்தை கொள்ளையிட்டவர் வைத்தியரே!

275 0

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று (09) வைத்தியசாலை காசாளரிடம் இருந்து துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையிட்டவர் அதே வைத்தியசாலை வைத்தியர் என்பது தெரியவந்துள்ளது.

7.9 மில்லியன் (இலங்கை மதிப்பில் 79 இலட்சம்) பெறுமதியான பணத்தையே ஹொரணையை சேர்ந்த (33-வயது) குறித்த வைத்தியர் கொள்ளையிட்டுள்ளார்.

கொள்ளையிட்ட வைத்தியர் முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்ற போது, வைத்தியசாலையில் கடமையில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவோட இணைக்கப்பட்ட இரு கான்ஸ்டபிள்கள் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் விரட்டிச் சென்று வைத்தியரை கைது செய்துள்ளனர்.

இதன்போது உத்தியோகபூர்வ பணிக்காக வைத்தியசாலையில் இருந்த சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் மாத்தறை பிரிவு தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் வருனி போகாஹவத்தயும் வைத்தியரை கைது செய்ய கான்ஸ்டபிள்கள் இருவருக்கும் உதவியாக இருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.