யாழ். நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகில் வீதியோரமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
மோட்டர் சைக்கிளில் வந்த இரு நபர்களே காண்ணாடி கூட்டை சேதமாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் நாக விகாரையின் முகப்பில் உள்ள புத்தர் சிலையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், புத்தர் சிலைக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் விகாரைக்கு இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தாக்குதல்தாரிகளை இனம் காணும் முகமாக விகாரையை சூழவுள்ள பிரதேசத்தில் காணப்படும் CCTV காணொளிகளை பொலிஸார் பரிசோதித்து வருகின்றனர்.