இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி முதல் விடுமுறையளிக்கப்பட்ட பாடசாலைகள் இம் மாதம் 29ம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலைகள் ஆரம்பமாகும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
தரம் 3, 4 மாணவர்களுக்கு 07:30 -11:30 வரையும், தரம் 5 மாணவர்களுக்கு 07:30 -; 12:00 மணி வரையும், தரம் 6, 7, 8 , 9 வரையான மாணவர்களுக்கு 07:30- 01:30 மணிவரையும் தரம்10, 11, 12 ; 13 வரையான மாணவர்களுக்கு 7:30 -; 3:30 மணி வரையும் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது