முகமாலையில் நேற்றும் அகழ்வுப் பணி; ஆயுத தளபாடங்களும் ஆடைகளும் மீட்பு

280 0

முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்ட நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் நேற்றும் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன.

மாவட்ட நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு காணப்பட்ட விடுதலைப்புலிகளின் அடையாளச் சின்னங்கள் மற்றும் ஆடைகளைக் கொண்டு அங்கு மீட்கப்பட்டவை விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவான சோதியா படையணிப் போராளிகளின் எச்சங்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின்போது, ஆயுத தளபாடங்கள் சிலவும் ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. மகசீன்கள் 08, கைக்குண்டுகள் 03, ஆர்பிஜி சுடுகுழல் குழாய்கள் 06 என்பனவற்றுடன் பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன.