புருண்டி நாட்டின் அதிபர் மாரடைப்பால் மரணம்: அரசு அறிவிப்பு

332 0

புருண்டி நாட்டின் அதிபர் பியர் குருன்சிஸா மாரடைப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புருண்டி. இந்த நாட்டின் அதிபராக 55 வயதான பியர் குருண்சிஸா இருந்து வந்தார்.

பியருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கருசியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மரணம் அடைந்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புருண்டி அரசு டுவிட்டர் பக்கத்தில் ‘‘அரசாங்கம் புருண்டி மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் மிகுந்த துக்கத்துடன் அதிபர் பியர் குருன்சிஸா மரணம் அடைந்த செய்தியை அறிவிக்கிறது’’ என்று பதிவிட்டுள்ளது.