அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 2.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.
மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.