பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் – வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு

332 0

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு விசாரணை திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மூவரடங்கிய நீதிமன்ற குழாம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது.

சம்பத் அபேகோன், சம்பவத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்கு ஆகிய மூவரடங்கிய நீதிமன்ற குழுவினால் விசாரணைக்கு வந்தபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்து.