9 மாகாணங்களும் ஆளுநர்களின் ஆட்சியில் இருப்பதற்கு முக்கிய காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு – சி.தவராசா

352 0

மக்களின் நாயகன் மகிந்த ராஜபக்ச என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன் புகழ்ந்துள்ளமையானது அரசியல் நாடகம் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, 9 மாகாணங்களும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாது ஆளுநர்களின் ஆட்சியில் இருப்பதற்கு முக்கிய காரணி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நாட்டின் பிரதமர்மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடுத்பத்தினரை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே அண்மையில் மகிந்தராஜபக்சவை மக்களின் நாயகன் என பல வார்த்தைகளை தொட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவரின் புகழாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை காலமும் மகிந்த அரசினை கடுமையாக விமர்சித்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரைக் கையாண்ட முறைமை தொடர்பில் பல விமர்சனங்களை முன்வைத்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட ராஜபக்ச குடும்பத்தினரை கடுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உட்பட அவரது கட்சியினர் விமர்சித்தனர்.

சம்பந்தனின் திடீர் புகழாரம் அரசியல் கபட நாடகமே இன்று நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் மாகாண சபை ஆட்சிமுறை நடைபெறாது ஆளுநர்களின் அதிகாரம் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்தத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே இவர்களின் செயற்பாடுகளினாலேயே மாகாண சபைத் தேர்தல் இடம்பெறாது போனது என்றார்.