வரணியில் ஆலயம் உடைத்து கொள்ளை

380 0

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஆலய கதவை உடைத்து உட்புகுந்த சந்தேக நபர் ஒருவர் அங்கிருந்த சங்கிலி, 40000 பணம் மற்றும் ஐம்பொண்னாலான கலசம் உட்பட பல பெறுமதியான பொருட்களை திருடிக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

ஆலயத்தில் பொருத்தப்பட்ட சிசிடீவி கமராவில் கொள்ளை சந்தேக நபர் கொள்ளையிடும் காட்சி பதிவாகியுள்ள போதிலும் குறித்த நபரை பொலிஸாரால் அடையாளம் காணமுடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சந்தேக நபர் தென்னிலங்கையை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.