நுவரெலியாவிலிருந்து யாழ் சாவகச்சேரி நோக்கி பயணித்த கார் அதிகாலை 1 மணியளவில் வவுனியா தேக்கவத்தை பகுதியில் விபத்துக்குள்ளானது. தொலைபேசிக் கம்பத்துடன் மோதியே இந்தக் கார் விபத்துக்குள்ளானது.
காரை செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.