கொரோனா வைரஸ் தொற்று நோயினால் ஏற்படுத்தப்பட்ட முடக்க நிலையால் யேர்மனியின் தொழில்துறை உற்பத்தி 17.9 விழுக்காட்டால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மார்ச் மாதம் 8.9 விழுக்காடாக இருந்த பொருளாதார வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது ஏப்பிரலில் 17.9 விழுக்காட்டால் சரிவடைந்துள்ளது. இது ஐரோப்பாவில் பெரிய பொருளாதாரத்தை மூடியுள்ளது.
ஜனவரி மாதம் 1991 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைப் போல் இன்றைய பொருளாதார வீழ்ச்சி அமைந்துள்ளது என ஜேர்மனியின் டெஸ்டாடிஸ் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நிறுவனம் நேற்று திங்களன்று தெரிவித்துள்ளது.