சிறுதுளி பெருவெள்ளம்- தாயகத்தில் தொடரும் நிவாரண பணிகள்- Help for smile e.V.

646 0

கொரோனாஉயிர்க் கொல்லியால் முடங்கிக் கிடக்கும் தாயக உறவுகளுக்கு கை கொடுப்பதற்கு Help for smile e.V. நிதி திரட்டுகிறது. இதுவரை திரட்டப்பட்டுள்ள நிதியில் நிவாரப்பணிகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யேர்மன் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களின் சமூக உணர்வை Help for smile e.V. தொண்டு நிறுவனம் பாராட்டி நிற்கின்றது . தாயக மக்களின் துயர் துடைப்பதில் Help for smile e.V. எப்போதும் முன்வரிசையில் நிற்பது தெரிந்ததே. அந்தவகையில் கடந்த நாட்களில் முத்துமாரி நகர் , பெரியமடு , கனகராயன் குளம் ,புதுக்குடியிருப்பு நைணைமடு நகரங்களில் வாழும் மிகவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு Help for smile e.V. உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தது . இவ் உதவிகளை முன்னின்று மேற்கொண்ட கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்திற்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.