உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் பயன்தரும் மரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்.மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் வளாகத்தில் மாவட்டச் செயலர் மரக்கன்று ஒன்றிணை நாட்டி வைத்தார்.
மேலும் மாவட்டச் செயலக ஊழியர்களுக்கும் பயன்தரும் மரக்கன்றுகளை மாவட்டச் செயலர் வழங்கி வைத்தார்.