வவுனியாவில் 29 வயதான இளம் குடும்பப் பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தீயில் எரிந்து ஆபத்தான நிலையில் குறித்த இளம் குடும்ப பெண் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (08) காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா – ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும் அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது இளம் குடும்ப பெண் ஒருவருக்கு மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிந்த நிலையில், அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணுக்கு தீ வைத்தது யார் என்பது தொடர்பில் மாமடு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.