முதல்-அமைச்சருடன், அமைச்சர் செங்கோட்டையன் இன்று சந்திப்பு

243 0

பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசிக்க இருக்கிறார்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை வருகிற 11-ந் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்து இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருக்கும் இந்த சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்த வேண்டுமா? என அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக நேற்று வெளியான தகவல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்றும் முதல்-அமைச்சரை, அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேச இருக்கிறார். பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.