சனிக்கிழமைகளில் அஞ்சல் நிலையங்களை மூடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து, இன்றைய தினம் (09) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில், அஞ்சல்மா அதிபர் மற்றும் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் அஞ்சல் தொழிற்சங்க உறுப்பினர்கள் எனப் பலர் பங்கேற்கவுள்ளனர்.
அஞ்சல் நிலையங்களை சனிக்கிழமைகளில் திறப்பதால் மேலதிக கொடுப்பனவு செலுத்துவதற்காக அதிகம் பணம் செலவிடப்படுவதை கருத்திற்கொண்டு, செலவுகளை குறைக்கும் நோக்கில் அஞ்சல் நிலையங்களை சனிக்கிழமைகளில் மூடுவதற்கு, திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எனினும், மேற்படி தீர்மானத்தால் தமக்கான மேலதிக கொடுப்பனவு இல்லாமல் போவதாக தெரிவித்து, அஞ்சல் திணைக்கள ஊழியர்கள்; மேலதிக நேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.