இணுவிலில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா

264 0

யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த மாதத்தின் இறுதி நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற குறித்த வியாபாரி இம் மாதம் முதலாம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விசேட படகு சேவை மூலமாக அவர் இந்தியா சென்றுள்ளார். அங்கு 2ம் திகதி நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.இணுவில் பகுதியில் 45 நாட்களுக்கும் மேலாக அவர் தங்கியிருந்துள்ளார்.

குறித்த நபருடைய பெயர் கணேஸ் பாபு எனவும் அவருடைய வயது 41 எனவும் இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

தற்போது சுகாதார துறையினர் அவர் குறித்த தகவல்களை இந்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.